×

மசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்; 3 பேர் கைது

ராசிபுரம், ஏப்.23: ராசிபுரத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்ட போலீசார், 3 பேரை கைது செய்தனர். மசாஜ் சென்டருக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்ததுடன், தப்பியோடிய புரோக்கரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்-சேலம் சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் வேதா கேரளா மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது, அங்கு விபசாரம் நடந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சென்னையை சேர்ந்த 2 பெண்களை மீட்ட போலீசார், கண்ணன், மகாதேவன், தர்மபுரியை சேர்ந்த மணிவண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், புரோக்கராக செயல்பட்ட பாஸ்கர் என்பவரை தேடி வருகின்றனர். இதையடுத்து, ராசிபுரம் விஏஓ சரவணன் முன்னிலையில், மசாஜ் சென்டருக்கு போலீசார் சீல் வைத்தனர். மசாஜ் செ்னடரில் பிடிபட்ட 2 பெண்களை மீட்டு, அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் சிலர், காவல் நிலையத்தில் தொடர்ந்து சமரசம் பேசி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED மணல் கடத்திய 3 பேர் சிக்கினர்