கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சூளகிரி, ஏப்.21: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள வேப்பனஹள்ளி, சூளகிரி பகுதியில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிடிஓக்கள் சிவக்குமார், சுப்பிரமணி மற்றும் ஊராட்சி செயலர் வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் பேருந்து நிலைய வளாகத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். பேருந்து பயணிகளிடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினர்.

Related Stories:

>