வீதிகள்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மும்முரம்

ஊத்தங்கரை, ஏப்.23: ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. நேற்று முன்தினம், ஒரேநாளில் 259 பேர் தொற்று பாதிப்பிற்குள்ளான நிலையில், மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில், பேரூராட்சி சார்பில் மருத்துவமனைகள் மற்றும் அனைத்து வங்கிகள் முன்பும் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பேரூராட்சி பணியாளர்களை கொண்டு, ,பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளை நிறுத்தி, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தினர். அப்போது, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ₹200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories:

>