×

வரத்து அதிகரிப்பால் புளி விலை சரிவு

கிருஷ்ணகிரி, ஏப்.23: கிருஷ்ணகிரி மார்க்கெட்டிற்கு புளி வரத்து அதிகரிப்பால் விலை சரிந்தது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கூடும் புளிசந்தை தமிழக அளவில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் புளிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சந்தையில், ஏராளமான விவசாயிகள் புளியை விற்பனைக்காக கொண்டு வந்து குவிப்பர். வியாபாரிகள் புளியின் தரத்தை பார்த்து வாங்கிச் செல்வது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை தரத்திற்கேற்ப கிலோ ₹27 முதல் ₹45 வரை விற்பனையானது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், நேற்று நடந்த சந்தையில் ஏராளமான விவசாயிகள் புளியை விற்பனை செய்ய கொண்டு வந்தனர். வியாபாரிகளோ, வரத்து அதிகரிப்பை காரணம் காட்டி, அதிகபட்ச விலையாக ₹35க்கு வாங்கினர். இதனால், விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Tags :
× RELATED பேட்டராய சுவாமி கோயில் தேர்த்திருவிழா