ஆட்டோ உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம்

தர்மபுரி, ஏப்.23:  தர்மபுரியில் கொரோனா பரவல் அதிகரிப்பையொட்டி, ஆட்டோ உரிமையாளர்களுடன் போக்குவரத்து போலீசார் கலந்தாய்வு நடத்தினர்.

தர்மபுரி போக்குவரத்து போலீசார் சார்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்டோ உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. போக்குவரத்து பிரிவு போலீஸ் எஸ்ஐ சின்னசாமி தலைமை வகித்தார். எஸ்ஐகள் ஞானதி, மாது மற்றும் போக்குவரத்து போலீசார், ஆட்டோ உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், எஸ்ஐ சின்னசாமி பேசுகையில், ‘கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அரசின் வழிகாட்டு நெறிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் போது, முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கொரோனா பரவல் கட்டுப்படுத்த ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்களின் முக்கிய பங்கு உள்ளது. வீதிமுறை மீறி செயல்பட்டால் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும்,’ என்றார்.

Related Stories:

>