களக்காடு அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

களக்காடு, ஏப். 23:  களக்காடு  அருகே அப்பர்குளம், தெற்கு அப்பர்குளம், சூரப்புதுக்குளம், நடுவகுளம் கிராமங்களைச் சேர்ந்த 4 கிராமத்திற்கும் மேற்பட்டோர் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ்  பயன்பெற்று வருகின்றனர். சிங்கிகுளம் நீரேற்று  நிலையத்தில் இருந்து சேகரிக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பைப்லைன் வாயிலாக குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது. இதனிடையே அப்பர்குளத்தில் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்படவில்லை. இதனால் அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறிச் செல்வதோடு 4 கிராமங்களில் விநியோகமும் தடைபட்டுள்ளது.  இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு  குழாயை  சீரமைத்து, சீராக குடிநீர் விநியோகம் செய்ய முன்வர வேண்டும் என களக்காடு ஒன்றிய திமுக துணை  செயலாளர் கருப்பசாமி பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories:

>