சேதுக்குவாய்த்தானில் மணல் கடத்தலை தடுத்த பஞ். தலைவிக்கு மிரட்டல்

திருச்செந்தூர், ஏப். 23: சேதுக்குவாய்த்தானில் ஆற்று மணல் கடத்தலை தடுத்த பஞ்சாயத்து தலைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிந்த போலீசார், லோடு ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட இருவரைத் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ராஜபதி மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் முத்துராஜ் (23). லோடு ஆட்டோ டிரைவரான இவரும், சேதுக்குவாய்த்தான் வடக்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சந்திரன் (45) என்பவரும் குரும்பூர் அருகே சேதுக்குவாய்த்தான் ஆற்றில் இருந்த மணலை நேற்று லோடு ஆட்டோவில் ஏற்றி கடத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற பஞ்சாயத்து தலைவர் சுதா சீனிவாசன், லோடு ஆட்டோவை மறித்து இருவரையும் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் சுதா சீனிவாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனராம். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த குரும்பூர் எஸ்ஐ தாமஸ், இருவரையும் தேடி வருகிறார்.

Related Stories:

>