நெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரக்கன்று நடும் பணி

திருச்சி, ஏப்.20: மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரங்கள் நடும் பணியை திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை, இந்துசமய அறநிலையத்துறை, ரயில்வே, பேரூராட்சி ஆகிய துறைகள் மூலம் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ரங்கம் பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகள், ரங்கம் தெற்குதேவி தெரு பெருமாள்புரம், சஞ்ஜீவ் நகர், பாலாஜி நகர், திருவானைக்கோவில் வடக்கு னிவாசநகர், ஆகிய இடங்களில் 35,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த மரங்கள் தற்போது 15 அடிக்கு மேல் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.

லால்குடி ரயில்வே ஜங்சன் பகுதியில் 1.75 ஏக்கர் பரப்பளவில் 15,000 மரக்கன்றுகளும், கல்லக்குடி பேரூராட்சியில் 1.30 ஏக்கர் பரப்பளவில் 20,000 மரக்கன்றுகளும், சமயபுரம், மாகாளிக்குடி கிராமத்தில் உஜ்ஜையினி ஓம்காளியம்மன் திருக்கோயில் பின்புறம் 0.85 ஏக்கர் பரப்பளவில் 10,000 மரக்கன்றுகளும், சிறுகனூர், கொனலை கிராமத்தில் 50,000 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது. இந்நிலையில் புள்ளம்பாடி வெங்கடாஜலபுரம் கிராமத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி முறையில் மா, கொய்யா, புளி, வேம்பு, சப்போட்டா, எலும்பிச்சை, வாகை, பூவரசம், நீர்மருது, மலைவேம்பு, புங்கன்மரம், தேக்கு, சிப்பு, வில்வம், நாகலிங்கம், இலுப்பை, பலா போன்ற 59 வகையான 75,000 மரக்கன்றுகள் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்.

Related Stories: