கலெக்டர் தொடங்கி வைத்தார் வணிகர்கள் கட்டாயம் தடுப்பூசி போட அறிவுறுத்தல்

திருச்சி, ஏப்.20: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு பரவ துவங்கிய கொரோனா வணிகர்களை முற்றிலும் முடக்கி போட்டது. பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், இரண்டாவது அலை படுமோசமாக பரவி வருகிறது. வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மத்திய மாநில அரசுகள் நம்மை காப்பாற்றும் என்று காத்திருக்காமல் வணிகர்கள் நோய் தொற்று வராமல் தங்களை தற்காத்து கொள்ள தங்களது கடைகளுக்கு வருவோர் முககவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். முககவசம் அணியாமல் வருவோர்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. மேலும், 45 வயதை கடந்த வணிகர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>