×

சேதப்படுத்தப்பட்ட மாநகராட்சி பேனர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தீர்ந்தது

திருச்சி, ஏப்.20:  திருச்சி பொன்மலையில் ரயில்வே மருத்துவமனை உள்ளது. இங்கு ரயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலால் பாதிக்கப்படும் ரயில்வே ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொரோனா சிகிச்சை வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுபாடு காரணமாக ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு நுழைவு கேட்டில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணத்தால் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘இதுவரை கோவிஷீல்டு 2400 டோஸ் தடுப்பூசி வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு தடுப்பூசி வரவில்லை. இந்த வார இறுதியில் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தடுப்பூசிக்காக யாரும் காத்திருக்க கூடாது என்பதற்காக இந்த அறிவிப்பை ஒட்டியுள்ளோம்’’ என்றார்.

இந்நிலையில் ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் மாவட்டம் நிர்வாகம் சார்பில் நேற்று காலை 300 கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசியை ரயில்வே மருத்துவமனைக்கு வழங்கியது. அதன்பின்னர் தடுப்பூசி தட்டுப்பாடு என்று வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டு ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Tags : Corona ,Trichy Railway Hospital ,
× RELATED கொரோனா காரணமாக உயர்த்தப்பட்டிருந்த...