×

தொழிலாளர்கள் ஏமாற்றம் திருவெறும்பூர் பகுதியில் முககவசம் அணியாத 115 பேருக்கு அபராதம்

திருவெறும்பூர், ஏப். 20:தமிழகத்தில் கொரொனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அபராதம் விதிப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் முககவசம் இல்லாமல் சுற்றித் திரிந்ததாக 50 பேர் மீதும், பெல் காவல் நிலையத்தில் 20 பேர் மீதும், துவாக்குடி காவல்நிலையத்தில் 5 பேர் மீதும், நவல்பட்டு காவல் நிலையத்தில் 40 பேர் என மொத்தம் 115 பேருக்கு தலா 200 வீதம் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

Tags : Thiruverumbur ,
× RELATED குரூப் 4 தேர்வு முறைகேட்டில் 2 ஊழியர்...