×

போலீசார் அதிரடி உர விலையை மத்திய அரசே நிர்ணயிக்க கோரி கோணிப்பையை சட்டைபோல் அணிந்து வந்து விவசாயிகள் மனு

திருச்சி, ஏப்.20: உர விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கோணிப்பையை சட்டைபோல் அணிந்து விவசாயிகள் மனு அளித்தனர். உர மானிய கொள்கையில் மாறுதல் செய்து, உர விற்பனை விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜசிதம்பரம் தலைமையில் நில நிர்வாகிகள் உரசாக்குகளை சட்டைபோல் அணிந்து சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க நேற்று வந்தனர். கூட்டமாக வந்ததால் போலீசார் தடுத்து நுழைவு கேட்டை பூட்டினர். பின்னர் ராஜசிதம்பரம் உட்பட 5 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதைடுத்து அவர்கள் மனுவை பெட்டியில் போட்டனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, மத்திய அரசு 1.4.2010க்கு முன்பு உரத்தின் விற்பனை விலையை 50 கிலோ மூட்டைக்கு விலை நிர்ணயம் செய்து ஆண்டுதோறும் உர நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவுக்கு ஏற்ப உரமானியத்தை உயர்த்தி வழங்கி வந்ததால் உரத்தின் விலை உயரவில்லை. மத்திய அரசு 1.4.2010க்கு பின்னர் உரமானிய கொள்கையில் மாறுதல் செய்து தழைசத்து, மணிசத்து, சாம்பல் சத்து, கந்தகசத்து என உரசத்தின் அடிப்படையில் நிலையான உரமானியத்தை உரநிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றது. நிறுவனங்கள் மூலப் பொருட்கள் விலையேற்றம் ஏற்படும் போது, தங்கள் இஷ்டத்திற்கு உரவிலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதித்து வருகிறது. 50 கிலோ கொண்ட உரமூட்டையின் விற்பனை விலையை நிர்ணயித்து அறிவிக்கவும், உரநிறுவனங்களும் அனுமதித்து வருகிறது. அடிக்கடி உரவிலை உயர்த்தி விற்பனை செய்து வருவதினால், உரசாக்கில் விற்பனை விலையை அச்சிட்டாலும் பதுக்கல் செய்து, கொள்ளை லாபம் அடிக்க உர நிறுவனங்களுக்கும், உர விற்பனையாளர்களுக்கும் சாதகமாகவும், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

1.4.2021 அன்று இப்கோ உர நிறுவனம் மூலம் 2021-2022ம் ஆண்டிற்குரிய உரவிலையை உயர்த்தியது பற்றிய செய்தி வெளிவந்தது பற்றி மத்திய ரசாயன அமைச்சருக்கு தெரியும். தமிழ்நாட்டில் உரவிலையை உயர்த்தியதை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியதினால் மத்திய இரசாயன அமைச்சர்கள் அவர்கள் தற்காலிகமாக உரவிலையேற்றத்தை நிறுத்தி வைத்துள்ளதை நிரந்தரமாக அமுதல்படுத்திட கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கான பத்திரிக்கை செய்தியை இணைத்துள்ளோம். உரமானிய கொள்கையில் மாறுதல் செய்து அடிக்கடி உரவிலை உயர்வை ஏற்படுத்தி வரும் முறையை கைவிட்டு, மேற்படி உர விற்பனை விலையை (M.R.P.) மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். இதுபற்றி உரநிறுவனங்கள், உரவிற்பனையாளர்கள், விவசாய பிரதிநிதிகளை அழைத்து நிரந்தர தீர்வு காணவும், உர விலையேற்றத்தை தடுக்கவும் மாவட்ட கலெக்டர் மூலமாக மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Central Government ,
× RELATED அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை...