சிஐடியூ வலியுறுத்தல் உரிமையாளர்களிடம் எஸ்பி ஒப்படைப்பு தொற்று நோய் பீதியில் பொதுமக்கள் நன்னிலம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.25 ஆயிரம் மதுபாட்டில்கள் கொள்ளை

திருவாரூர், ஏப்.20: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆண்டிபந்தல் அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் இரும்புக் கம்பிகளால் டாஸ்மாக் கடை கதவின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலை டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்கள் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு வந்த நன்னிலம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>