திமுக வேட்பாளர்கள் குற்றச்சாட்டு உர விலை உயர்வை கைவிட கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஏப்,20: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உர விலை உயர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை அரண்மனை முன் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரமோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர்கள் சாமு தர்மராஜன், செந்தில்குமார், கிருஷ்ணன், பாலு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார், மாதர் சங்க மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, இளைஞர் பெருமன்ற தலைவர் செல்வகுமார், தொழிற்சங்க தலைவர்கள் சேவையா, முத்துக்குமரன், கோவிந்தராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், கட்டுப்பாடு க்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

Related Stories: