கோடை உழவு செய்தால் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் இணை இயக்குநர் அறிவுரை

விருதுநகர், ஏப்.20:  வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் வெளியிட்ட அறிக்கையில், ‘மாவட்டத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பெய்யும் கோடை மழைநீரை சேமிக்க கோடை உழவு உதவுகிறது. கோடை உழவு செய்தால் மண்ணில் இறுக்கம் குறையும். பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் வெளியேறி பறவைகளுக்கு உணவாகும். மழைநீர் 10 செ.மீ முதல் 15 செ.மீ வரை ஆழத்திற்கு செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் அபாயம் உள்ள நிலையில், கோடை மழை பெய்த உடன் விவசாயிகள் நிலத்தை உழவு செய்தல், மண்ணின் அடியில் இருக்கும் கூட்டுப்புழுக்கள் வெளியேறி பறவைகளுக்கு இறையாகி விடும். இயற்கை முறையில் செலவின்றி படைப்புழு பொறிப்பு தன்மையை கட்டுப்படுத்தலாம். கோடை உழவு செய்தால் மண் ஈரப்பதம் காக்கப்படும். கோடை உழவினால் படைப்புழு மட்டுமின்றி இதர பூச்சி, கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படும். கோடை உழவினால் நிலத்தை பண்படுத்தி, பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் படைப்புழுக்களை கூட்டுப்புழு பருவத்திலேயே கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>