பாபநாசம் கணபதி அக்ரகாரத்தில் கோயிலுக்கு பாதை அமைத்து தர வேண்டும்

தஞ்சை, ஏப்.20: தஞ்சை அருகே பாபநாசம் கணபதி அக்ரகாரம் புதுத்தெருவில் கோயிலுக்கு பாதை அமைத்து தர வேண்டி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது; தஞ்சை கணபதிஅக்ரகாரம் புதுத்தெருவில் 130 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கருப்பையா கோயில் 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது. இக்கோயிலுக்கு செல்லும் பாதை அருகில் உள்ள நில உடமைதாரர் ஒருவர் ஆக்கிரமித்து அடைத்துவிட்டார்.

இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வழி இல்லை. மேலும் ஊராட்சி மேல்நிலை குடிநீர் தொட்டிக்கும், மின்சார டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடத்திற்கும் செல்ல முடியவில்லை. எனவே கோயிலுக்கு செல்லும் இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் கோயிலுக்கு சென்று வழிபட பாதை உருவாக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>