கலெக்டரிடம் பொதுமக்கள் மனு தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 217 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

தஞ்சை, ஏப்.20: தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 217 பேர் கொரேனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி, முதியவர் உயிரிழந்தனர். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 217 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று 210 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். மேலும் 958 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 22480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21232 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 95 வயது மூதாட்டி மற்றும் 70 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இதுவரை மாவட்டத்தில் 285 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>