மணல் திருடிய 4 பேர் கைது

ராஜபாளையம், ஏப்.20: ராஜபாளையம் அய்யனார் கோவில் சாலையில்  உள்ள தனியார் பள்ளி  மற்றும் அய்யனார். கோவில் சாலை ஆறாவது மைல் டேம் பகுதியில்  வடக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி  சட்ட விரோதமாக  மணல் அள்ளி வந்தது தெரிந்தது. அவர்களிடம்   விசாரணை நடத்தியதில் சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த  பொன்ராஜ் (28), செந்தில்குமார்(22)  மற்றும் கணபதிசுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்த தொந்தியப்பன்(30) மற்றும் சுந்தரராஜபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன்(22) ஆகியோரை போலீசார் கைது செய்து, இரண்டு டிராக்டர்  மற்றும் மணலையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>