திருமண மண்டபங்களில் 50 சதவீத பேருடன் திருமணங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் ஒலி,ஒளி,பந்தல் அமைப்பாளர்கள் கோரிக்கை

விருதுநகர், ஏப்.20: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒலி, ஒளி, பந்தல் உள்ளிட்ட அமைப்பாளர்கள் கூட்டமைப்பு அளித்த மனுவில், ஒலி, ஒளி, ஜெனரேட்டர்,பந்தல்,சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரம், மேடை அலங்காரம் அமைப்பாளர்கள் தொழில் ஆண்டு முழுவதும் வருவாய் தரக்கூடியது அல்ல. ஏப்,மே,ஜூன் மாதங்கள் மட்டும் வேலை வாய்ப்பு இருக்கும். பலகோடி மதிப்பிலான பொருட்கள் முதலீடாக வைத்து தொழில் செய்து வருகிறோம். பல லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் வேலை இழந்து வருவாய் இழந்து பாதிக்கப்பட்டோம். தற்போது மீண்டும் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால் வாழ்வாதார சிக்கல் எழுந்துள்ளது. தியேட்டர், வணிக வளாகங்கள் 50 சதவீதம் இயங்க அனுமதித்ததை போல் திருமண மண்டபங்களில் 50 சதவீதத்துடன் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும். மதம் சார்ந்த சமூக நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், கூட்டங்கள் நடத்த சிறப்பு அனுமதி அளிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>