திருவில்லிபுத்தூரில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

திருவில்லிபுத்தூர், ஏப்.20: திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்புத்துறை நிலைய போக்குவரத்து அலுவலர் அந்தோணி தலைமை வகித்தார்.  இதில் தீயை அணைக்கும் போது பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருட்களும் மாணவ, மாணவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அவற்றின் பயன்பாடு குறித்து மாணவ, விளக்கிக் கூறப்பட்டது. மாணவ, மாணவிகள் கேட்ட  கேள்விகளுக்கு தீயணைப்புத் துறையின் சார்பில் விரிவாக விளக்கம் தரப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் செய்திருந்தனர்.

Related Stories:

More
>