கம்பம் மூதாட்டி மர்மச்சாவில் திருப்பம் குடிபோதையில் பலாத்காரம் செய்து கொன்ற கொடூர வாலிபர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

கம்பம், ஏப். 20: கம்பத்தில் புதிய பஸ்நிலையத்தின் கீழ்புறத்தில், தனியார் தென்னந்தோப்பில் கடந்த 8ம் தேதி 70 வயது மூதாட்டி ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில், தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இதனிடையே, கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கள்ளர் பள்ளி தெருவைச் சேர்ந்த ஞானேசன் (24), மாடு மேய்த்துக் கொண்டு, மூதாட்டிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஞானேசனை போலீசார் தேடியபோது, அவன் திருப்பூரில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. போலீசார் தன்னை தேடுவதை அறிந்த ஞானேசன் கம்பத்திற்கு வந்துள்ளான். அப்போது புதிய பஸ்நிலையம் நுழைவு வாயிலில், போலீசார் அவனை கைது செய்தனர்.போலீசார் விசாரணையில், ‘கடந்த 8ம் தேதி அதிகாலை குடிபோதையில் கம்பம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்ததாகவும், அப்போது பஸ்நிலையம் வடபுறம் காமயகவுண்டன்பட்டி இணைப்புச்சாலை செல்லும் வழியில், மரக்கடை முன்பு தூங்கி கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் பலத்காரம் செய்து, இச்சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க மூதாட்டியின் கழுத்தை நெறித்து, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து, உடலை அருகில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் மறைத்து வைத்தது தெரிய வந்தது.

Related Stories:

More
>