கலெக்டர் தகவல் பொன்னமராவதி ஒன்றியத்தில் தடுப்பூசி போட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்

பொன்னமராவதி, ஏப்.20: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி போட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலர்கள் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கான கொரோனோ தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஒன்றிய ஆணையர் வெங்கடேசன் தலைமை வகித்தார். ஊராட்சிகள் ஆணையர் ரவி முன்னிலை வகித்தார். காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிர்மல் கொரோனோ தடுப்பூசியின் அவசியம், கொரோனோ முன்தடுப்பு முறைகள் குறித்து விளக்கிக்கூறினார்.

ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளிலும் கொரோனோ தடுப்பு பணிகள் மேற்கொள்ளவும், நிலவேம்பு மற்றும் கபசுர கசாயம் வழங்கவேண்டும், கொரோனோ தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதில் துணை ஆணையர்கள் குமார், பஞ்சநாதன், முருகேசன், ஊராட்சித்தலைவர் காமராஜ், கிரிதரன், செல்வமணி, கீதா, மாரிக்கண்ணு, சுமதி,ராமசாமி, அர்ச்சுணன், இக்பால் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் சேரனூர் ஊராட்சி செயலர் பழனியப்பனுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தினர்.

Related Stories:

More
>