டிஎஸ்பி தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம்

பெரியகுளம், ஏப். 20: பெரியகுளத்தில் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில், நகர வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம் மற்றும் காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிஎஸ்பி கூறுகையில், ‘கடைவீதி, காந்தி சிலை, மார்க்கெட் வீதி, பெருமாள் கோவில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக நெரிசலாக உள்ளதால் வியாபாரிகள், வர்த்தகர்கள் தங்கள் கடை முன்பு வாகனங்கள் நிறுத்த கூடாது. மீறினால் கடை முன்பு வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடையில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு அபதாரம் விதிக்கப்படும்’ என கூறினார். இதில் பெரியகுளம் ஆய்வாளர்கள் சுகுமாறன், செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர், வியாபாரிகள் சங்க தலைவர் மணிவண்ணன், செயலாளர் ராஜவேலு உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>