நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கூடலூர், ஏப். 20: நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்ததால், பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் வினாடிக்கு 100 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 350 கன அடியாக உயர்ந்தது.

பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 126.65 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 350 கனஅடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 3974 மில்லியன் கனஅடி. 71 அடி உயரமுள்ள வைகையின் நீர்மட்டம் 63.39 அடி. நீர்வரத்து வினாடிக்கு 39 கனஅடி. அணையிலிருந்து 72 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 4282 மில்லியன் கனஅடி.

126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.48 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 85.60 மில்லியன் கனஅடி.

57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42.60 அடி. அணைக்கு நீர்வரத்தும், நீர் வெளியேற்றமும் இல்லை. அணையின் இருப்புநீர் 220.43 மில்லியன் கனஅடி. 52.55 அடி உயரமுள்ள சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 44.90 அடி. அணைக்கு நீர்வரத்தும் இல்லை, நீர்வெளியேற்றமும் இல்லை. அணையின் இருப்புநீர் 56.58 மில்லியன் கனஅடி. மழையளவு: பெரியாறு 16.4 மி.மீ, தேக்கடி 10.4 மி.மீ., கூடலூர் 1.8 மி.மீ, உத்தமபாளையம் 3.20 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

Related Stories:

More
>