×

அளவுக்கு அதிகமாக மக்கள் பயணம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் தனியார் நிறுவன பஸ்கள் அரசு போக்குவரத்து ஊழியர்கள் புகார்


மானாமதுரை, ஏப்.20: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பஸ்களில் பயணிகள் நின்று செல்லுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மானாமதுரையில் தனியார் பஸ்களில் வெளியே தொங்கிக்கொண்டு செல்லும் வகையில் 95 சதவீத பயணிகளை ஏற்றி செல்கின்றனர். பஸ்சுக்குள் கடும் நெருக்கடியில் பயணிப்பதால் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவும் நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், மதுரை பரமக்குடி, மதுரை இளையான்குடி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக இடநெருக்கடியுடன் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். அரசு பஸ்களில் பயணிகள் நின்று கொண்டு செல்ல அனுமதிக்ககூடாது என்று தெரிவித்துள்ளது. ஓரிரு பயணிகள் நின்றபடியே பயணித்தால் கூட அரசு பஸ் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை, போலீசார் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் தனியார் பஸ்களில் இவ்வாறு விதிகளை மீறுபவர்களை கண்டும் காணாதது போல இருக்கின்றனர்.

இவ்வாறு பயணிகளை ஏற்றிசெல்வதால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இயலாது. அளவாக பயணிகளை ஏற்றி செல்வதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் நாங்கள் கொரோனா விதிகளை மீறாமல் நடந்து வருகிறோம். அளவாக பயணிகளை ஏற்றி செல்வதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் நாங்கள் கொரோனா விதிகளை மீறாமல் நடந்து வருகிறோம். எனவே வட்டாரபோக்குவரத்து துறை, போலீசார் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிப்பதுடன் தற்காலிகமாக உரிமங்களை ரத்து செய்து கடும் எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : corona ,
× RELATED கொரோனா தடுப்பூசி போடும் முகாம்