×

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரிப்பு

சிவகங்கை, ஏப்.20: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 50ஐ தாண்டி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முதலில் தினமும் நூறு பேர், பின்னர் 50 பேர் என பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் முதல் ஆறு மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்நிலையில் தற்போது கடந்த ஒரு வாரமாக தினமும் சராசரியாக 50க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 54 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 680 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 7 ஆயிரத்து 103 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 129 பேர் கொரோனா பாதிப்பில் மரணமடைந்துள்ளனர். 

Tags : Sivagangai district ,
× RELATED சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம்...