×

7 பேரை கடித்த நாய்

இளையான்குடி, ஏப்.20: இளையான்குடியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக கண்மாய்கரை பகுதி, தாலுகா ஆபீஸ், போலீஸ் ஸ்டேசன், கீழாயூர், கீழாயூர் காலனி ஆகிய பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றுகின்றன. இதனால் வீதிகளில் நடந்து செல்லவே மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேற்று இளையான்குடியில் தெருநாய் ஒன்று விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கடித்தது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட 7 சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த சிறுவர்கள் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

Tags :
× RELATED சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவூர்...