×

கொரோனா கட்டுப்பாடுகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள்

சிவகங்கை, ஏப்.20:  சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் அமலில் இருந்து வருகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது. சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றையதினம் இறைச்சிக்கடைகள், மீன் மார்க்கெட், காய்கறிக்கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள்(கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு(கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை. கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டத்தில் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு