×

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பேருந்துகள் நேரம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது

பெரம்பலூர்,ஏப்.20: பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் நேரம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளபடி இன்று (20ம்தேதி) முதல் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கவும், இதனால் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகள் இயக்கம் செய்யக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., திருச்சி மண்டலம் மூலம், அரசு அறிவித்துள்ள ஊரடங்கை பின்பற்ற பேருந்துகள் இயக்கத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் பேருந்து மாலை 4.30 மணிக்கும், விழுப்புரம் செல்லும் பேருந்து இரவு 7 மணிக்கும், லப்பைக்குடிக்காடு செல்லும் பேருந்து இரவு 9 மணிக்கும், ஆத்தூர் செல்லும் பேருந்து இரவு 8 மணிக்கும், திருச்சி செல்லும் பேருந்து இரவு 8.30 மணிக்கும், துறையூர் செல்லும் பேருந்து இரவு 9 மணிக்கும், அரியலூர் செல்லும் பேருந்து இரவு 9 மணிக்கும் இரவு நேரத்தில் கடைசி பேருந்துகளாக இயக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...