×

ராஜஸ்தான் மாநிலத்திற்கு லாரியில் ஜவுளி ஏற்றி சென்ற கணவரை காணவில்லை

பெரம்பலூர்,ஏப்.20: ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஜவுளி ஏற்றி சென்று காணாமல் போன லாரி டிரைவரை கண்டுபிடித்து தரும்படி, அவரது மனைவி தனது பிள்ளைகள், உறவினர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீருடன் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரியம்மாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). இவரது மனைவி தனலட்சுமி(40) இவர் நேற்று தனது இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினருடன் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.
அங்கு கண்ணீருடன் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : எனது கணவர் ரவிச்சந்திரன் நாமக்கலில் லாரி டிரைவராக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12ம் தேதி ஈரோட்டிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகருக்கு டிஎன்28 ஏடி- 0115 என்ற பதிவில் கொண்ட லாரியில் ஜவுளி லோடு ஏற்றி சென்றார்.

லோடு இறக்க வேண்டிய இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அலுவலகம் சென்று வருகிறேன் என்று சொன்னவர், 16ம் தேதி காலை 9 மணியில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. காணாமல் போன 16ம் தேதியன்று மட்டுமே அவரது செல்போன் இங்கியது. அதன்பிறகு செயல்படவில்லை. இதுவரை அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறாமல் மொத்த குடும்பமும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. எனவே தயவுசெய்து எனது கணவரை கண்டுபிடித்துத் தர வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rajasthan ,
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...