×

மதுவிற்ற முதியவர் கைது

ஆர்.எஸ்.மங்கலம், ஏப்.20: ஆர்.எஸ்.மங்கலம் அருகே இந்திரா நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே இந்திரா நகர் ஒயின்ஷாப் அருகே காட்டு பகுதியில் மதுபானம் விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அங்கு மதுபானம் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை வைத்திருந்த தளக்கான் பச்சேரியை சேர்ந்த பெருமாள்(72) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 19 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை