×

நிர்வாகிகள் தேர்வு

பரமக்குடி, ஏப்.20: செளராஷ்ட்ர கல்விக் குழுத் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. இந்தாண்டு 19 பேர் கொண்ட நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் நடந்தது. இரு அணிகளாக 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தல் அதிகாரியாக கிருஷ்ணமூர்த்தி இருந்தார். ஒரு அணியில் 18 பேரும், மற்றொரு அணியில் ஒருவரும் என 19 பேர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். தொடர்ந்து நடந்த கல்விக்குழு கூட்டத்தில் கல்விக்குழு தலைவராக நாகநாதன், உப தலைவராக எஸ்.என்.நாகநாதன், செளராஷ்ட்ர மேல்நிலைப்பள்ளி செயலாளர் மற்றும் தாளாளராக அமரநாதன்,பொருளாளர் உபேந்திரன், செளராஷ்ட்ர இளநிலை பள்ளி மற்றும் இந்திரா நகர் தொடக்க பள்ளி தாளாளராக ஜெ.எஸ்.ராஜன், செளராஷ்ட்ர மழலையர் மற்றும் நர்சரி பள்ளி தாளாளராக டி.ஆர்.வரதராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை