×

தாந்தோணிமலை வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சிறுவர் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்

கரூர், ஏப். 20: தாந்தோணிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை அகற்றி புதிதாக அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. ஏராளமான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. குடியிருப்பு வளாகம் பயன்பாட்டுக்கு வரும்போது, சிறுவர், சிறுமிகள் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா வளாகம் அமைத்து தரப்பட்டது.

சில ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த இவை, தற்போது பராமரிப்பின்றி பொலிவிழந்தது. மேலும் இதிலுள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. எனவே, இதனை இந்த உபகரணங்களை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க வேண்டும் என சிறுவர், சிறுமிகள் மற்றும் குடியிருப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த விளையாட்டு உபகரணங்களை புதிதாக மாற்றி அமைத்து, பூங்காவை சீரமைத்து தர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரும் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Tantonimayan Housing Board ,
× RELATED கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில்...