லாரியிலிருந்து ரூ.1.20 லட்சம் டயர்கள் திருட்டு

கரூர், ஏப். 20: கரூர் அருகே டாரஸ் லாரியில் இருந்து ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள 6 டயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கரூர் ரெட்டிபாளையம் கொங்கு நகரை சேர்ந்தவர் லோகநாத்(30). இவர், டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 12ம்தேதி இரவு மதுரை-கரூர் சாலையில் உள்ள ஒரு ஒர்க் ஷாப் முன்பு நிறுத்தியிருந்த டாரஸ் லாரியில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 6 டயர்கள் காணவில்லை என தெரிவித்திருந்தார்.  இந்த புகாரின் பேரில் லாரி டயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் யார், என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>