×

நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மெல்லிசை கலைஞர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம்

 மதுரை, ஏப். 20: நலவாரியம் அமைக்க வலியுறுத்தி மதுரையில் மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின் அவர்கள் கலெக்டர் அன்பழகனிடம் கொடுத்த கோரிக்கை மனு: தமிழகம் முழுவதும் மெல்லிசை தொழில்நுட்பத்தை மட்டுமே முழுநேரத் தொழிலாகக் கொண்டு லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகிறோம். ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரை நான்கு மாதங்கள் மட்டுமே கோயில் விழா, பொது விழாக்கள் நடைபெறும். இந்த மாதத்தின் வருமானமே ஆண்டு முழுவதும் எங்களின் வாழ்வாதாரம். ஐந்து ஆண்டுகளுக்கு 2 முறை சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல்கள் இந்த நான்கு மாத காலக்கட்டத்தில்தான் வருகிறது. அப்போது, தேர்தல் வழிகாட்டுதல் என கூறி, எங்கள் தொழில் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. வாழ்வாதாரம் பாதிக்கிறது. திருமணம் நடத்த அனுமதிக்கும் நிலையில், அதில் எங்களின் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் தடை காலத்தில் எங்களது ஒவ்வொரு கலைஞரின் குடும்பத்திற்கும் பேரிடர் நிவாரண நிதியும், தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற கலைஞராகவும், எங்களுக்கு என தொழிலாளர் நல வாரியமும் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார். 

Tags : Madurai ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...