×

ஊரடங்கு போட்டு ஓட்டுமிஷினில் மோசடி வக்கீல் நந்தினி இன்று உண்ணாவிரதம்

மதுரை, ஏப்.20: இரவு நேர ஊரடங்கு போட்டு, ஓட்டு மிஷினில் மோசடி செய்ய முயற்சி நடப்பதை கண்டித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கப்படும் என்று சமூக ஆர்வலர் வக்கீல் நந்தினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எலக்ட்ரானிக் ஓட்டு மிஷினில் மோசடி செய்வதற்காகவே இரவு நேர ஊரடங்கு போடப்படுகிறது. இதன் மூலம் மிகப்பெரிய மோசடி நடத்த முடிவெடுத்து விட்டனர். இதற்கான எல்லா வேலைகளையும் பார்த்து வருகின்றனர். இதனைக் கண்டித்து சென்னையில் தலைமைச்செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் முன்பு ஏப்.20 (இன்று) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை எனது தந்தை ஆனந்தனுடன் துவக்குகிறேன். ஓட்டு எண்ணிக்கைக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு போட்டு, வாக்கு இயந்திரம் மோசடி மூலம் அடிமை ஆட்சியை கொண்டு வர சதி நடக்கிறது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தி, தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Nandini ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்