பூத்து குலுங்கும் கனகாம்பரம்... ஒட்டன்சத்திரம் அருகே வீட்டை உடைத்து 30 பவுன் திருட்டு

ஒட்டன்சத்திரம், ஏப். 20: ஒட்டன்சத்திரம் அருகே வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டையை சேர்ந்தவர் பொன்ராஜ் (70). இவர் நேற்று முன்தினம் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டிலிருந்த 30 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து பொன்ராஜ் அளித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் எஸ்ஐ இளஞ்செழியன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories:

More
>