நீர் மோர் பந்தல் திறப்பு

வத்தலக்குண்டு, ஏப். 20: வத்தலக்குண்டுவில் அதிமுக கிழக்கு ஒன்றியம், நகர கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நகர செயலாளர் பீர்முகமது தலைமை வகிக்க, மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் மோகன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், இளநீர், தர்பூசணி, வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கினார். இதில் நிர்வாகிகள் ராஜசேகரன், மாசானம், கனி பாய், துரைராஜ், ரத்தினம், பிச்சை, குமரேசன், அருண்குமார், பாண்டி ராதா, மொக்கயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>