×

தங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் கிணற்றில் மூழ்கி சாவு

மேல்மலையனூர், ஏப். 20: மேல்மலையனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த தங்கையை காப்பாற்ற முயன்ற அக்காள் பரிதாபமாக இறந்தார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா பருதிபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் நேற்று விவசாய நிலத்தில் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது மூன்று வயது பெண் குழந்தைகள் வீட்டினருகே உள்ள நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதில் எதிர்பாராதவிதமாக மூன்று வயது சிறுமி புகழரசி விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்து பதறிப்போன அவரது சகோதரி அனிதா (5) அவரை காப்பாற்ற முற்பட்டபோது அவரும் தவறி விழுந்து கிணற்றில் இருவரும் மூழ்கினர்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கிணற்றில் மூழ்கிய சிறுமிகளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் இதில் புகழரசி மட்டும் மீட்கப்பட்டார். அனிதா நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மேல்மலையனூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறந்து கிடந்த அனிதா உடலை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Akkall ,
× RELATED ஒரே மேடையில் சந்தோஷம், துக்கமும்,...