×

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.20: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். இணை செயலாளர் அமல்ராஜ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் என்ஏசிபி-வி திட்டத்தின் கீழ் ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.  திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஊழியர்களை வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊழியர்களுக்கு குழு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணியின் போது, நோய் தாக்குதலால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் சேரலாதன் விளக்கி பேசினார். மாநில பொருளாளர் ரமேஷ், மாநில துணைத் தலைவர் ஜெகஜோதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி வாழ்த்தி பேசினார். மாவட்ட தலைவராக மணி, செயலாளராக சுமதி, பொருளாளராக சிவசண்முகம், துணைத்தலைவராக ஸ்ரீதர், இணை செயலாளராக ஸ்ரீதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : AIDS Control Staff Union General ,Committee ,Meeting ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்