தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி

தர்மபுரி, ஏப்.20: பென்னாகரம் அருகே தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது. முகாமில், அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயின்று வரும் இளநிலை 4ம் ஆண்டு மாணவர்கள் தேனீ வளர்ப்பு பற்றியும், அதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டுவது குறித்தும் பயிற்சி அளித்தனர். இதில் தேனீக்களின் வகைகள் குறித்தும், தேன் மற்றும் தேன் சார்ந்த பொருட்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர். இப்பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>