தீ தொண்டு நாள் விழிப்புணர்வு

அரூர், ஏப்.20: அரூரில் தீ தொண்டு நாள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவியருக்கு தீயணைப்புத்துறையினர் வழங்கினர். அரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் சார்பில், அரூர் அப்துல் கலாம் நகரில், நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில், அம்பேத்கர் அறக்கட்டளை பயிற்சி மையத்தில் பயிலும் மாணவ, மாணவியர், தீ விபத்தின்போது இறந்த தீயணைப்பு வீரர்களுக்கு, மவுன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீ தொண்டு நாள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கினர்.

Related Stories:

More
>