வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் கைது 5 பேர் மீது வழக்கு

திருவாரூர், ஏப். 19: திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன் குடிக்காடு குணசேகரன் என்பவரது மகள் மதிவதனி(27) என்பவருக்கும், குடவாசல் அடுத்த ஆலடி கருப்பூர் கலியமூர்த்தி மகன் அரவிந்தன்(32) என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. அரவிந்தன் மன்னார்குடி வட்ட வழங்கு அலுவலகத்தில் தற்காலிக கணினி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், மதிவதனி நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரில், தனக்கும் அரவிந்தனுக்கும் திருமணமாகி சில மாதங்களிலே கணவர் அரவிந்தன், மாமனார், மாமியார் மற்றும் கணவரின் சகோதரிகள் ஒன்று சேர்ந்து வரதட்சணையாக 25 பவுன் நகை மற்றும் பணம் கேட்டு தன்னை மனதாலும், உடலளவிலும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் மதிவதனியின் கணவர் அரவிந்தன் மற்றும் மாமனார், மாமியார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் அரவிந்தனை கைது செய்து நீடாமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் அரவிந்தன் மன்னார்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: