திருப்புவனம் பேரூராட்சியில் கொரோனா தொற்று தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம்

தஞ்சை, ஏப்.19: திருப்புவனம் பேரூராட்சியில் கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுறுத்தலின்படி நடைபெற்றது. கூட்டத்தில் செயல் அலுவலர் பங்கயற்செல்வி, சுகாதார ஆய்வாளர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு முககவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் கூட்டமாக கூடுவதை தவிர்த்தல் ஆகியவற்றின் அவசியம் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்தல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப் பட்டது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்க உறுப்பினர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், கோயில் நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>