கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

கும்பகோணம்,ஏப்.19: கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 வைணவத் திருத்தலங்களில் ரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரை பிரம்மோற்சவம் திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் இவ்விழா நேற்று காலை கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேளதாளம் முழங்க கருடாழ்வார் திருவுருவ வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு ஏற்றப்பட்டது.

கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணி சுவாமி, தேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திருவிழா நாட்களில், நாள்தோறும் சுவாமி பிரகார உலா நடைபெறுகிறது, விழாவின் முக்கிய நிகழ்வான 21ம் தேதி (புதன்கிழமை) நான்காம் நாள் தங்ககருட சேவை, 9ம் நாளான 26ம் தேதி (திங்கட்கிழமை) கொரோனா தொற்று அரசு விதிமுறைகள் படி, சித்திரை தேரோட்டத்திற்கு பதிலாக கோயில் பிரகாரத்தில் படிசட்டத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: