பயணிகள் கடும் அவதி கறம்பக்குடி பேரூராட்சியில் நிலுவையில் இருந்த ரூ.42 லட்சம் வரி பாக்கி வசூல் செய்த அலுவலர்களுக்கு பாராட்டு

கறம்பக்குடி, ஏப்.19: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருரட்சியில் செயல் அலுவலராக சுப்பிரமணியன் பணி புரிந்து வருகிறார். பேரூராட்சிக்கு உட்பட்டு சீனிக்கடை முக்கம், அம்புக்கோவில் முக்கம், திருவோணம் சாலை, உள்கடை வீதி, மீன்மார்கெட் பகுதி, நகைக்கடை வீதி, பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் சொத்துவரி தொழில்வரி உரிமை கட்டணம் போன்ற கட்டணங்கள் வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு இந்த அனைத்து வரிகளும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒரு சிலரிடம் இருந்து பாக்கியாக இருந்து வந்துள்ளது.

செயல் அலுவலர் தலைமையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக நிலுவையில் இருந்த வரியை வசூல் செய்து வந்தனர். பேரூராட்சி நிர்வாக நடவடிக்கையால் பேரூராட்சி பகுதிகளில் இயங்கி வந்த கடை காரர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்டு ரூ.42 லட்சம் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் எந்தவித பாக்கியும் இல்லாமல் வசூல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரி வசூல் செய்த பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள், பணியாளர்களை திருச்சி மண்டல பேரூராட்சி இயக்குனர் கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொழில் வரி, சொத்து வரி மற்றும் உரிமை கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் பேரூராட்சி நிர்வாகம் வசூல் செய்தது. இது கறம்பக்குடி பகுதியில் அலுவலர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியனுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories:

More
>