×

பகவாண்டிப்பட்டியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி, ஏப்.19: பொன்னமராவதி அருகே பகவாண்டிப்பட்டியில் கொரோனோ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் கலைவாணி ஆணையின்படி பொன்னமராவதி அருகே உள்ள பகவாண்டிபட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு பயனாளிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு, தனிமனித விலகல், முககவசம் அணிவதன் அவசியம் மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்து பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் அறிவுறுத்தி பேசினார். இம்முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்ஸ துணைத் தலைவர்ஸ ஊராட்சி செயலர், பணிதள பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Corona Prevention Awareness Camp ,Bhagavandipatti ,
× RELATED கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்