விராலிமலை முருகன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா

விராலிமலை, ஏப்.19: விராலிமலை முருகன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாகும். அருணகிரிநாதருக்கு அஷ்டமா சித்தி வழங்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இச்சிறப்பு மிக்க இந்த திருத்தலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலை மாலை இருவேளையும் மலை மேல் முருகள் வள்ளி தெய்வானைக்கு மண்டலாபிஷேகம் நடைபெற்று வந்தது. 48 நாட்கள் நடைபெற்ற இந்த மண்லாபிஷேகத்தின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று மாலை முன்தினம் கோயில் பிரகார மண்டபத்தில் 108 புனித தீர்த்த குடங்கள் வைக்கப்பட்டு முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை செய்து பூர்ணாஹூதி செய்து புஜைகள் செய்யப்பட்ட புனிதநீரால் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டன. இதன் பிறகு சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். மஹா தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்ககப்பட்டது.

விழாவில் அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா குழு நிர்வாகிகள் பூபாலன், பாஸ்கர், ஜெகதீசன், அருண். முருகேசன். சேகர், திருப்பதி, ரமேஷ், கந்தசாமி, பொன்னுசாமி, சந்தானமூர்த்தி உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: