பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி வாகன விற்பனையில் 20 சதவீதம் சரிவு

புதுக்கோட்டை, ஏப்.19: உலக அளவில் கச்சா எண்ணை விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த விலை ஏற்றம் இன்னும் சில நாட்களில் ரூ.100 தொட்டுவிடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பெருவாரியான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக பிரத்யோகமான ஷோரூம்கள் பல்வேறு இடங்களில் அமைத்துள்ளனர்.

இந்த வாகனங்ளுக்கு முன்னணி நிதி நிறுவனங்கள் கடன் வசதியும் செய்து தருகிறது. இதனால் பொதுமக்களும் அவர்களுக்கு உள்ள வசதியை பொருத்து அவர்களுக்கு பிடித்த வாகனங்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்கள் வாங்குவோர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒரு நாளைக்கு 50 கி.மீ தூரம் வாகனங்களை இயக்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.100ல் இருந்து ரூ.150 வரை அதிகரிக்கிறது. இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 வரை செலவாகிறது. இந்நிலையில் வாகனங்கள் வாங்க முடிவு செய்தவர்கள் தங்கள் முடிவுகளை தற்போது நிரைவேற்றாமல் தள்ளிபோட்டு வருகின்றனர்.

இதனால் வாகனங்களின் விற்பனை சுமார் 20 சதவீதம் குறைந்துவிட்டது. வரும் நாட்களில் இந்த விற்பனை குறைவு கண்டிப்பாக அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் பழை வாகனங்கள் விற்பனை செய்வோர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து இந்த வாகனங்கள் விற்பனையில் இடுபட்டு வரும் வியாபாரிகள் கூறியதாவது: புதிய வாகனங்கள் வாங்கி ஒரு வருடம் பயன்படுத்திவிட்டு சிலர் விற்பனை செய்வார்கள். மேலும் கடன் பிரச்னையால் வாகனங்களை விற்பனை செய்வார்கள். மேலும் அவ்வப்போது மோட்டார் வாகன சந்தையில் அறிமுகமாகும் புதிய ரக வாகனங்களை வாங்க ஏற்கனவே வைத்துள்ள வாகனங்களை விற்பனை செய்வார்கள்.

இதபோல் வங்கியில் கடன் பெற்று அதனை முறையாக செலுத்தாதவர்களின் வாகனங்களை வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து ஏலம் விடுவார்கள். இப்படி வரும் வாகனங்களை வாங்கி நாங்கள் சில தொகை லாபம் நிர்ணயித்து வியாபாராம் செய்வோம். இதற்கு வங்கி கடன்குளும் ஏற்பாடு செய்து தருவோம். கடந்த சில ஆண்டுகளாக இந்த வியாபாரம் நல்ல நிலையில் சென்றுகொண்டு இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எங்கள் விற்பனை குறைந்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்தே வருகிறது. சுமார் 20 சதவீம் விற்பனை குறைந்து விட்டது. இன்னும் வரும் நாட்களில் கண்டிப்பாக விற்பனை சரிவு அதிகரிக்கும். இதனால் நாங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories:

More
>