பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் தேர்தல் நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற 2 பேர் குண்டாசில் கைது

ஜெயங்கொண்டம், ஏப்.19: ஜெயங்கொண்டம் அருகே தேர்தல் நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் மந்திரி (எ) சக்திவேல்(35) மற்றும் தங்கராசு மகன் மணிகண்டன் (42) ஆகிய இருவரும் தேர்தல் நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்தனர். தகவலறிந்த அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அரியலூர் எஸ்பி பாஸ்கரன், ஏடிஎஸ்பி திருமேனி ஆகியோர் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் ரத்னா கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவரையும் ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories:

More